பங்கஜ் அத்வானி தேச பில்லியர்ட்ஸ் சாம்பியன்!
ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 74வது தேச பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் வீரரும், உலக சாம்பியனுமான பங்கஜ் அத்வானி 2வது முறையாக தேச பில்லிர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்!
கோட்ல விஜயபாஸ்கர ரெட்டி உள்ளரங்கில் நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் 5 முறை தேச சாம்பியன் பட்டம் பெற்ற ரயில்வே வீரர் அசோக் சாண்டில்யாவை 1325 - 853 என்ற புள்ளிகள் கணக்கில் பங்கஜ் அத்வானி தோற்கடித்தார்.
இறுதிப் போட்டியில் முதல் கட்டத்திலேயே 577 - 290 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த அத்வானி, அதற்குப் பிறகும் மிகச் சிறப்பாக ஆடி பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
47வது விஜயத்தில் 199 புள்ளிகளையும், 59வது விஜயத்தில் 117 புள்ளிகளையும் அத்வானி தேற்றினார்.
3வது, 4வது இடங்களுக்கு நடந்த போட்டியில் 8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் கீத் சேத்தி 692 - 674 என்ற புள்ளிகள் கணக்கில் ரூப்பேஷ் ஷாவை தோற்கடித்தார்.