1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

சேவா‌க்கை ‌நீ‌க்‌கியது தவ‌று: சே‌ப்ப‌ல்!

ஆஸ்‌ட்ரேலிய வீரேந்திர ஷேவாக் தேர்வு உத்தேச அணி இயன் சேப்பல்
ஆஸ்‌ட்ரேலிய சுற்றுப் பயணத்துக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச அணியில் வீரேந்திர ஷேவாக்கை நீக்கியது தவறு என்று முன்னாள் ஆஸ்‌ட்ரேலிய அ‌ணி‌த் தலைவ‌ர் இயன் சேப்பல் கூறியுள்ளார்.

இந்த மாத இறுதியில் இந்திய அணி, ஆஸ்‌ட்ரேலியாவுக்கு சென்று விளையாட உள்ளது. இதற்கான அணியை தேர்வு செய்ய 26 வீரர்கள் அடங்கிய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வீரேந்திர ஷேவாக் இடம் பெறவில்லை.

ஷேவாக்கை நீக்கியதற்கு முன்னாள் ஆஸ்‌ட்ரேலிய அ‌ணி‌த் தலைவ‌ர் இயன் சாப்பல் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்‌ட்ரேலிய பயணத்திற்கான அணியில் ஷேவாக் நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய அவர், அணியை இன்னமும் தேர்வு செய்யாததால் இந்த தவறை சரி செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஷேவாக்கை பார்த்து இன்னமும் ஆஸ்‌ட்ரேலிய அணியினர் அஞ்சுவதாக கூறியுள்ள அவர், ஷேவாக்கின் விரைவாக ரன் குவிக்கும் ஆற்றல் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

பிரெட் லீ போன்ற பந்து வீச்சாளர்களை அவர் அடித்து நொறுக்கும் விதம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று சே‌ப்ப‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.