1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

ர‌வி சா‌ஸ்‌தி‌ரி த‌ந்தை மரண‌ம்!

இந்திய கிரிக்கெட் அணி ரவி சாஸ்தி தந்தை ஜெயாத்ரித்த சாஸ்திரி மரண‌ம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவ‌ர் ரவி சாஸ்திரியின் தந்தை ஜெயாத்ரித்த சாஸ்திரி இன்று காலை மரணமடைந்தார்.

நிமோனியா காய்ச்சலா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ஜெயா‌த்‌ரி‌த்த சா‌ஸ்‌‌தி‌ரி நேற்று இரவு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா‌ர். அ‌ங்கு ‌சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

78 வயதாகும் ஜெயாத்ரித்த சாஸ்திரி மருத்துவராவார். அவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் மும்பை சிவாஜி பார்க் சுடுகாட்டில் இன்று மாலை நடைபெறுகிறது.