1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

ஆசிஃப் மேலும் 2 மாதங்களுக்கு விளையாட முடியாது

ஆசிஃப் மேலும் 2 மாதங்களுக்கு விளையாட முடியாது
முழங்கை காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் மொஹமது ஆசிஃப் மேலும் 2 மாதங்களுக்கு விளையாட முடியாது என்று ஆஸ்ட்ரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முழங்கையில் அறுவை சிகிச்சை செ‌ய்ய வே‌ண்டி‌யிரு‌ப்படுவதால் அவர் மேலும் 2 மாதங்களுக்கு ஓய்வு எடுப்பது அவசியம் என்று ஆஸ்ட்ரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிகிச்சைக்காக சிட்னி அனுப்பப்பட்டுள்ள மொஹமது ஆசிஃப் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இத்தகவலை உறுதி செய்துள்ளனர்.

முழங்கை காயம் காரணமாக சமீப காலங்களாக மொஹமது ஆசிஃப் நிறைய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க முடியாத நிலை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் காயம் குறித்தும் மருத்துவ நிபுணர்களின் கருத்தை நாடியிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.