1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

ர‌ஞ்‌சி போ‌ட்டி‌யி‌ல் யுவரா‌ஜ் சி‌ங்!

யுவராஜ் சிங் ரஞ்சி கோப்பை விளையாட உள்ளார்
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத யுவராஜ் சிங், ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக முதல் 2 டெஸ்டுகளுக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் சேர்க்கப்படவில்லை. அவர் 12வது வீரராக அறிவிக்கப் பட்டார்.

இந்தநிலையில் அவர் ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டிருப்பதாக இ‌ந்‌திய கிரிகெட் பேரவை தெரிவித்துள்ளது.

பஞ்சாப் சார்பில் அவர், பெங்கால் அணிக்கு எதிராக நாளை நட‌க்க உ‌ள்ள ரஞ்சிக் கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் சிலிகுரி நாளை செ‌ல்‌கிறா‌‌‌ர்.