1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

இ‌ந்‌திய ர‌சிக‌ர்களு‌க்கு ‌பிரெட் ‌லீ பாரா‌ட்டு!

இ‌ந்‌திய ர‌சிக‌ர்களு‌க்கு ‌பிரெட் ‌லீ பாரா‌ட்டு
ஆஸ்‌ட்ரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது இந்திய ரசிகர்கள் சிறந்த முறையில் நடந்து கொண்டதாக ஆஸ்‌ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.

இந்தியா-ஆஸ்‌ட்ரேலியா இடையிலான ஒருநாள் போட்டி தொடரின் போது ஆஸ்‌ட்ரேலிய வீரர் சைமன்ஸ் ரசிகர்களால் நிறவெறி தாக்குதலுக்கு ஆளானதாக குற்ற‌ம் சா‌ற்றப்பட்டது.

மேலும் இந்திய பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆஸ்‌ட்ரேலிய வீரர்களோடு மோதலில் ஈடுபட்டதாகக் கூறி பெரும் சர்ச்சை கிளப்பப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்‌‌ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் ‌‌லீ இந்த தொடரின் போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிறந்த முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை பாராட்ட வேண்டும் என்று கூறியுள்ள அவர், யாரோ ஒரு சில ரசிகர்கள் செய்த தவறான செயல்கள் பெரிதாக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீசாந்த் போன்ற வீரர்களின் அணுகுமுறையை தாம் வரவேற்பதாகவும், இது போன்ற ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என்றும், இந்திய வீரர்கள் உறுதியுடன் போராடி ஆஸ்‌ட்ரேலியாவுக்கு சவால் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.