1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பொருளாதார‌த்தை ஊ‌க்கு‌வி‌‌க்க ரூ.20,000 கோடி கூடுத‌ல் ‌நி‌தி: ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌ப்பு!

சென்வாட் பெட்ரோலியம் சலுகை 
மத்திய அரசு
ச‌ரியு‌ம் பொருளாதார‌த்தை ஊ‌க்கு‌வி‌க்கு‌ம் வகை‌யி‌ல், நட‌ப்பு ‌நி‌தியா‌ண்டி‌ல் ‌தி‌ட்ட‌ச் செல‌‌வின‌ங்களு‌க்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒது‌க்குத‌ல், பெ‌ட்ரோ‌லிய‌ம் அ‌ல்லாத பொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதான செ‌ன்வா‌ட் வ‌ரி‌யி‌ல் 4 ‌விழு‌க்கா‌ட்டை குறை‌த்த‌ல் எ‌ன்பன உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு சலுகைக‌ள் அட‌ங்‌கிய ‌நி‌தி‌ச்சலுகை‌த் ‌தி‌‌ட்ட‌த்தை ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ம‌த்‌திய அரசு இ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ள ‌நி‌தி‌ச்சலுகை‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் மு‌க்‌கிய அ‌ம்ச‌ங்க‌ள் வருமாறு:

1. இ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌ல் மே‌ற்கொ‌ள்ள‌‌ப்படு‌ம் ‌தி‌ட்ட‌ங்க‌ளி‌ன் செல‌வின‌ங்களு‌க்கு கூடுதலாக ரூ.20,000 கோடி‌க்கு‌ம் மே‌ல் ஒது‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

2. பெ‌ட்ரோ‌லிய‌ம் அ‌ல்லாத பொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதான செ‌ன்வா‌ட் வ‌ரி‌யி‌ல் 4 ‌விழு‌க்காடு குறை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

3. ஏ‌ற்றும‌தி‌ச் சலுகைகளு‌க்காக ரூ.350 கோடி கூடுத‌ல் ‌நி‌தி ஒ‌து‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

4. பொது‌த்துறை வ‌ங்‌கிக‌ள் மூல‌ம் இர‌ண்டு (ரூ.5 ல‌ட்ச‌ம் வரை ஒரு ‌பி‌ரிவு, ரூ.5 முத‌ல் ரூ.20 ல‌ட்ச‌ம் வரை ம‌ற்றொரு ‌பி‌ரிவு) ‌வீ‌ட்டு‌க் கட‌ன் ‌தி‌ட்ட‌ங்க‌ள் ‌விரை‌வி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌‌ம்.

5. தொ‌‌‌ழி‌ல்நு‌ட்ப மே‌ம்பா‌ட்டு‌ ‌நி‌திய‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் (TUF) ‌கீ‌ழ் ஜவு‌ளி‌த்துறை‌க்கு கூடுதலாக ரூ.1,400 கோடி ஒது‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

6. பெளட‌ர் தயா‌ரி‌ப்‌பி‌ற்கான நாஃ‌ப்தா‌ ‌மீதான இற‌க்கும‌தி வ‌ரி ‌நீ‌க்க‌‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

7. பொருளாதார வள‌ர்‌ச்‌சி த‌ற்போது‌ள்ள ‌நிலை‌யி‌ல் இரு‌ந்து அடு‌த்த ‌நி‌தியா‌ண்‌டி‌ல் ச‌ரி‌ந்து‌விடாம‌ல் தடு‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதுபோல இ‌ன்னு‌ம் பல சலுகைக‌ள் தொ‌ழி‌ல், வ‌ர்‌த்தக‌த் துறை‌யினரு‌க்கு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.