சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது: பிரதமர்!
நமது சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார்.
சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "நமது சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. கவலை தரத்தக்க அளவில் வன்முறைகள் அதிகரித்து, ஆத்திரம் அதிகரித்து சமூகத்தில் நிறைய பிளவுகள் காணப்படுகின்றன." என்று கவலை தெரிவித்தார்.
அவரவர் மதத்தைப் பின்பற்றுவதும், கலாச்சாரத்தைப் பின்பற்றுவதும், கருத்துக்களைப் பின்பற்றுவதும் நமது அடிப்படை உரிமையாகும். இதை நிராகரிக்கவோ அல்லது தங்களின் கருத்துக்கள், நம்பிக்கைகளை பிறரின் மீது திணிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது என்றார் அவர்.
நமது ஜனநாயக அரசியலின் அடிப்படையே கருத்து வேறுபாடுதான் என்றாலும், நாம் ஒன்றுபட்டுத்தான் செயல்பட்டு வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் பிரதமர்.