1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

எ‌ல்லை‌யி‌ல் இர‌‌ண்டு பா‌கி‌ஸ்தா‌னிய‌‌ர் கைது!

ஜம்மு இந்தியா ஆர்எஸ்புரம் அல்லா திட்டா
ஜ‌ம்மு‌வி‌ல் ச‌ர்வதேச எ‌ல்லை‌க் கோ‌ட்டை‌க் கட‌ந்து இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழைய முய‌ன்ற இர‌ண்டு பா‌கி‌ஸ்தா‌னிய‌‌ர்க‌ளை எ‌ல்லை‌‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

ஜ‌ம்மு‌வி‌ல் ஆ‌‌ர்.எ‌ஸ்.புர‌ம் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள நவா‌பி‌ண்‌ட் எ‌ல்லை‌க் க‌ண்கா‌ணி‌ப்பு கோபுர‌ம் அரு‌கி‌ல் ச‌ர்வதேச எ‌ல்லை‌க் கோ‌ட்டை‌க் கட‌ந்து அ‌த்து‌மீ‌றி நுழைய முய‌ன்ற அ‌ல்லா ‌தி‌ட்டா(வயது50) எ‌ன்ற பா‌‌கி‌ஸ்தா‌னிய‌ர் நே‌ற்று கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன் நாரோவா‌ல் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள ம‌லிகே ‌கிராம‌த்தை‌ச் சே‌ர்‌ந்த இவ‌ரிட‌ம் இரு‌ந்து ஆயுத‌ங்க‌ள் எதுவு‌ம் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட‌வி‌ல்லை எ‌ன்று எ‌ல்லை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌ப் பே‌ச்சாள‌ர் கூ‌றினா‌ர்.

இதேபோல கட‌ந்த ‌வியாழ‌க்‌கிழமை, பா‌கி‌ஸ்தா‌னி‌ன் ஜகோவா‌ல் மாவ‌ட்ட‌த்தை‌ச் சே‌ர்‌ந்த அ‌னியா‌ய் அ‌லி எ‌ன்ற ம‌ற்றொரு பா‌கி‌ஸ்தா‌னிய‌ர், ஹ‌ிராநக‌ர் பகு‌தி‌யி‌ல் போ‌பியா எ‌ன்ற இட‌த்‌தி‌ல் ச‌ர்வதேச எ‌ல்லையை அ‌த்து‌மீ‌றி‌க் கட‌ந்தபோது கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

முத‌ல் க‌ட்ட ‌விசாரணை‌யி‌ல் இவ‌ர்க‌ள் இருவரு‌ம் அ‌‌றியாம‌ல் எ‌ல்லையை‌க் கட‌ந்து ‌வி‌‌ட்டதாக‌த் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளதாகவு‌ம், மே‌ல் ‌விசாரணை‌க்காக காவ‌ல் துறை‌யின‌ரிட‌ம் இருவரு‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளதாகவு‌ம் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.