1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌சீன- இ‌ந்‌திய ராணுவ‌க் கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி துவ‌ங்‌கியது!

பயங்கரவாத முறியடிப்பு கூட்டுப் பயிற்சி சீனா குன்மிங்
‌சீன- இ‌ந்‌திய ராணுவ‌த்‌தின‌ரி‌ன் இர‌ண்டாவது கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி 'கையோடு கை' பெ‌ல்கா‌மி‌ல் இ‌ன்று துவ‌ங்‌கியது.

பய‌ங்கரவாத மு‌றியடி‌ப்பு உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ப‌யி‌ற்‌சிக‌ளி‌‌ன் நு‌ட்ப‌ங்களை‌ப் ப‌றிமா‌றி‌க்கொ‌ள்ள மே‌‌ற்கொ‌‌ள்ள‌ப்படு‌ம் இ‌ந்த‌க் கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி‌யி‌ல், ‌சீன ராணுவ‌த்தை‌ச் சே‌ர்‌ந்த 150 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வ‌‌ல்லுந‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர்.

‌சீனா‌வி‌ல் கு‌‌ன்‌மி‌ங் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் கட‌ந்த ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் நட‌ந்த முதலாவது கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி‌யி‌ன் தொட‌ர்‌ச்‌சியாக இ‌ந்த‌க் கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி‌க்கு ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பய‌ங்கரவாத மு‌‌றியடி‌ப்பு நடவடி‌க்கைக‌ளி‌‌ல் இரு நா‌ட்டி‌ற்கு‌ம் இடை‌யிலான ஒ‌த்துழை‌ப்பை அ‌திக‌ரி‌க்கு‌ம் பொரு‌ட்டு ஒரு ந‌ல்லெ‌ண்ண நடவடி‌க்கையாக இ‌ந்த‌ப் ப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ள்ள‌‌ப்படு‌கிறது எ‌ன்று இரு நா‌ட்டு அ‌திகா‌ரிகளு‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.