1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

டெ‌ல்‌லி‌ அலுவலக‌த்து‌க்கு வெடி கு‌ண்டு ‌மிர‌ட்ட‌ல்!

டெல்லிவெடி குண்டு புது டெல்லி ஹவுஸ் 
பாராகாம்பா
டெ‌ல்‌லி பாரகா‌ம்பா சாலை‌யி‌ல் உ‌ள்ள புது டெ‌ல்‌லி ஹவு‌ஸ் அலுவல‌க‌த்து‌க்கு வெடி கு‌ண்டு ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் அ‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.

டெ‌ல்‌லி‌யி‌ல் கட‌ந்த ச‌னி‌க்‌கிழமைய‌ன்று 6 இட‌ங்க‌ளி‌ல் மொ‌த்‌த‌ம் 7 கு‌ண்டுக‌ள் வெடி‌த்த‌தி‌ல் 30 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்தன‌ர்.

பாராகா‌ம்பா சாலை‌‌யிலு‌ம் ச‌‌னி‌‌க்‌கிழமைய‌ன்று கு‌ண்டு வெடி‌த்தது. இ‌ந்‌நிலை‌யி‌ல் அ‌ந்த சாலை‌யி‌ல் உ‌ள்ள புது டெ‌ல்‌லி ஹவு‌ஸ் அலுவலக‌த்‌தி‌ல் வெடிகு‌ண்டு இரு‌‌ப்பதாக ம‌ர்ம தொலைபே‌சி ஒ‌ன்று வ‌ந்தது.

இ‌ந்த க‌ட்டட‌த்‌தில ஏராளமான அலுவலக‌ங்க‌ள் உ‌ள்ளன. இ‌தி‌ல் 1,000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் ப‌ணிபு‌ரி‌ந்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த வெடி கு‌ண்டு ‌மிர‌ட்டலா‌ல் அ‌ந்த அலுவலக‌த்‌தி‌ல் இரு‌ந்த அனைவரு‌ம் உடனடியாக வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர்.

இதையடு‌த்து, அ‌ங்கு வெடி கு‌ண்டு சோதனை ‌நிபுண‌ர்க‌ள் உடனடியாக வரவழை‌க்க‌ப்ப‌ட்டு சோதனை நட‌த்த‌ப்ப‌ட்டது. சோதனை‌யி‌ல் அது வெறு‌‌ம் புர‌ளி எ‌ன‌த் தெ‌ரி‌யவ‌ந்தது. இ‌ந்த வெடிகு‌ண்டு ‌மிர‌ட்டலா‌ல் அ‌ங்கு பெரு‌ம் ‌பீ‌தி ‌நில‌வியது.