1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

புதிய வேளாண் துறை செயலர் பொறுப்பேற்பு!

வேளாண் நந்தகுமார் அல்கா சிரோய்
மத்திய வேளாண் துறை செயலராக டி.நந்தகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்பு உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலராக பதவி வகித்து வந்தார். தனது 34 வருடப் பணியில் வேளாண்மை, நகர்ப்புற வளர்ச்சி, ஜவுளித் துறை, சுரங்கத் துறை, வர்த்தம் மற்றும் தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.சர்வதேச சணல் ஆய்வுக் குழுவின் தலைமை செயலராகவும் இருந்துள்ளார்.

வேளாண் துறை செயலராக இருந்த அல்கா சிரோய், உணவுத் துறை செயலராக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.