இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தவேண்டுமெனில், அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு இந்தியாவிற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் முழு விலக்கு (unconditional full waiver) அளிக்க வேண்டும் என்று இந்திய அணு சக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.