1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சி‌றில‌ங்க கட‌ற்படை ‌மீது தா‌க்குத‌ல் ‌விவகார‌ம்: ராமநாதபுர‌ம் ஆ‌ட்‌சிய‌ர் ‌விசாரணை!

இ‌ந்‌திய ‌மீனவ‌ர் ‌சி‌றில‌ங்க‌க் கட‌ற்படை‌ ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் நெடு‌ந்‌தீ‌வு ஆ‌ர்.‌கிஷோ‌ர் குமா‌ர்
இ‌ந்‌திய ‌மீனவ‌ர்களை கேடயமாக‌ப் பய‌ன்படு‌த்‌தி த‌ங்களை ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் தா‌க்‌கின‌ர் எ‌ன்று ‌சி‌றில‌ங்க‌க் கட‌ற்படை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்த புகா‌ர் கு‌றி‌த்து ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் ‌விசாரணை நட‌த்துவா‌ர் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌‌சி‌றில‌ங்கா‌வி‌ன் நெடு‌ந்‌தீ‌வு பகு‌தி‌யி‌ல் கட‌ந்த 2 நா‌ட்களு‌க்கு மு‌ன்பு, சுமா‌ர் 400 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்களை‌க் கேடயமாக வை‌த்து‌த் த‌ங்களை ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் தா‌க்‌கியதாகவு‌ம், அ‌ப்போது த‌ங்க‌ளி‌ன் இய‌ந்‌திர ‌பீர‌ங்‌கி‌ப் படகு ஒ‌ன்று 7 கட‌ற்படை‌யினருட‌ன் மாயமானதாகவு‌ம் ‌சி‌றில‌ங்க‌க் கட‌ற்படை கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியது.

இது கு‌றி‌த்து ‌சி‌றில‌ங்கா‌‌வி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய‌த் தூதரக‌‌த்‌தி‌ல் புகா‌ர் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத‌ன் அடி‌ப்படை‌யி‌ல், த‌ற்போது இ‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட ஆ‌ட்‌‌சிய‌ர் ஆ‌ர்.‌கிஷோ‌ர் குமா‌ர் ‌விசாரணை நட‌த்துவா‌ர் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.