1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அகமதாபாத்தில் ஓட்டல் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி!

அகமதாபாத் ஓட்டல் இடிந்து விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு 5 மாடி ஓட்டல் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

அகமாதபாத் கானல்புர் ரயில்வே நிலையம் அருகே சாகன் என்ற ஐந்து மாடி ஓட்டல் உள்ளது. இந்த கட்டடம் இன்று காலை 9.00 மணிக்கு திடீரென இடியத் துவங்கிய, சி‌றிது நேர‌த்‌தி‌ல் கட்டடம் முழுவதிலும் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயில்வே வாரியம் நடத்தும் தேர்வில் பங்கேற்பதற்காக 21 முதல் 24 வயதுடைய பெரும்பாலான இளைஞர்கள் இந்த ஓட்டலில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.