1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

தைவானில் மிதமான நிலநடுக்கம்!

தைபே தைவான் டைடுங் நிலநடுக்கம் ரிக்டர்
தைவானின் டைடுங் பகுதிக்கு அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டைடுங்கில் இருந்து தென்கிழக்கே 31 கி.மீ தூரத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம், இந்திய நேரப்படி இன்று காலை 8.46 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக உயிர் அல்லது பொருட் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
About Writer
Webdunia