1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

தொழிலாளர்களை பணியமர்த்தல்: இந்தியா-மலேசியா விரைவில் ஒப்பந்தம்!

மலேசியா இந்தியா ஒப்பந்தம் சுப்ரமணியம்
இந்தியத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்துவது தொடர்பாக இந்தியா-மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது.

"இந்தியர்களை பணியமர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன், இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்" எ‌ன்று மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

முன்னதாக, இந்திய தகவல்-தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா, அமைச்சர் சுப்ரமணியம் ஆ‌கியோ‌ரகட‌ந்புதன்கிழமை ச‌ந்‌தி‌த்து‌பபே‌சின‌ர்.

அப்போது, மலேசி‌வி‌ற்கவரும் இந்தியத் தொழிலாளர்கள் அனைவரும் உரிய முறையில் நடத்தப்படுவார்கள் என்றும், பிற தொழிலாளர்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, அவை அனைத்தும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் எ‌ன்று‌மசுப்ரமணியம் உறுதியளித்தார்.

இந்த‌‌புரிந்துணர்வு ஒப்பந்த‌த்‌தி‌ற்கஇ‌ந்‌திஅமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Webdunia