உணவு நெருக்கடியிலும் விரயத்திற்கு குறைவில்லை!
|
ஸ்டாக்ஹோம் சர்வதேச தண்ணீர் அமைப்பு, ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச தண்ணீர் நிர்வாக அமைப்பு ஆகியவை வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றிற்கு 30 சதவீத உணவு யாருக்கும் பயனில்லாமல் வீணடிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
இது போன்று உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதை பற்றி விலாவாரியாக பேசும் இந்த அறிக்கை, வீணடிக்கப்படும் உணவு என்பது மட்டுமல்ல, அதற்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீரும்தான் என்று கூறியுள்ளது.
அதாவது உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஆண்டொன்றிற்கு 30 சதவீத உணவுகள் வீணடிக்கப்படுகிறது என்றால், அதற்காக பயன்படுத்தப்பட்ட தண்ணீர், 500 மில்லியன் மக்கள் குடிப்பதற்கான தண்ணீருக்கு சமம் என்கிறது இந்த அமைப்பு.
| webdunia photo | WD |
இந்த வீணடிக்கப்படும் உணவுப் பொருட்களை பயிர் செய்வதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் இதனால் வீணடிக்கப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம் என்று கூறுகிறது இந்த ஆய்வறிக்கை. உணவு தானியப் பயிர்களுக்காக செலவிடப்படும் நீரில் பாதிக்கு மேல் வீணடிக்கப்பட்டு வருகிறது.
| webdunia photo | WD |

