1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பாக். ராணுவ வீரர் தலை துண்டிப்பு!

பாகிஸ்தான் வடக்கு வாஜிரிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க உளவாளி ராணுவ வீரர் ஃபெரோஸ்
பாகிஸ்தானின் வன்முறை மிகுந்த வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரின் தலையை தாலிபான் தீவிரவாதிகள் துண்டித்து கொலை செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்ட அந்த ராணுவ வீரரின் உடலில் "அமெரிக்க உளவாளி" என்ற குறிப்பும் காணப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

மிர் அலி என்ற ஊரில் குஷாலி இனத்தின் உறுப்பினரான ஃபெரோஸ் என்ற இவர் ஒரு அமெரிக்க உளவாளி. இது குறித்த இவரது ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய வீடியோ மிரான்ஷா சந்தைகளில் கிடைக்கும் என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த கொலையை உள்ளூர் தாலிபான் தீவிரவாதி ஒருவர்தான் செய்துள்ளார் என்று கூறப்படும் வேளையில் இதற்கான பொறுப்பை இன்னமும் எந்த அமைப்பும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.