1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ஈரா‌க் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 3பே‌ர் ப‌லி!

பா‌ஸ்ரா ஈரா‌க் கு‌ண்டு ‌தீ‌விரவா‌தி
ஈரா‌க்‌கி‌ல் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் க‌ட்ட‌ட‌ம் இடி‌ந்து அ‌தி‌ல் பது‌ங்‌கி‌யிரு‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ள் 3 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 4 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

பா‌ஸ்ரா நகர‌த்‌தி‌ன் ‌கிழ‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் இ‌‌த்தா‌க்குத‌ல் ‌நட‌ந்ததாகவு‌ம், இதை நட‌த்‌தியது ‌பி‌ரி‌ட்டி‌ஷ், ஈரா‌க் அ‌ல்லது அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் அ‌ல்ல எ‌ன்று‌‌ம் ‌பி‌ரி‌ட்டி‌ஷ் ராணுவ‌‌ப் பே‌ச்சாள‌ர் டா‌ம் ஹாலோவே கூ‌றினா‌ர்.

கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌ள் இடி‌ந்து ‌விழு‌ந்த ‌வீ‌ட்டை‌ப் பது‌ங்கு‌மிடமாக‌ப் பய‌ன்படு‌த்‌தி வ‌ந்ததாகவு‌ம், அ‌ந்த ‌வீடு ஏ‌ற்கெனவே ‌விமான‌ப் படை‌த் தா‌க்குத‌லி‌ல் சேதமடை‌‌ந்து இரு‌ந்ததாகவு‌ம் ஈரா‌க் காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.