1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌ல்: 2 காவல‌ர்க‌ள் காய‌ம்!

இல‌ங்கை வவு‌னியா பு‌தின‌ம் கெ‌ப்‌பி‌ட்டி‌க்கொ‌ல்லாவ
இல‌ங்கை மடு‌க்க‌‌ந்த‌வி‌ல் இ‌ன்று நட‌ந்த க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க‌க் காவ‌ல்துறை‌யினர் இருவ‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இல‌ங்கை, வவு‌னியா- கெ‌ப்‌பி‌ட்டி‌க்கொ‌ல்லாவ ‌பிரதான‌ச் சாலை‌யி‌ல் இ‌ன்று (புத‌ன்‌கிழமை) காலை 7 ம‌ணி‌க்கு க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌ல் நட‌ந்ததாகவு‌ம், அ‌தி‌ல் அ‌ப்பகு‌தி‌யி‌ல் ரோ‌ந்து‌ப் ப‌ணி‌யி‌‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த ‌சி‌றில‌ங்க‌க் காவல‌ர்க‌ள் இருவ‌ர் காயமடை‌ந்ததாகவு‌ம் பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

காயமடை‌ந்த 2 காவல‌ர்களு‌ம் வவு‌னியா மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளன‌ர்.