1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பா‌க்.ல் தற்கொலை‌த் தாக்குதல்: 30 பேர் பலி!

பா‌க்.ல் தற்கொலை‌த் தாக்குதல்: 30 பேர் பலி!
வடமேற்கு பாகிஸ்தானில் நடந்த தற்கொலை‌த் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்; 35 பேர் காயமடைந்தனர்.

வடமேற்கு பாகிஸ்தானின் டேரா அதாம்கேலில் ஒரு மலைவாழ் மக்கள் இனத்தவரை தா‌க்குவத‌ற்காக நட‌த்த‌ப்ப‌ட்ட தற்கொலை‌த் தா‌க்குத‌ல் இதுவாகு‌ம்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'டேரா பகுதியில் ஐந்து குடும்பத்தினர் சே‌ர்‌ந்து நடத்திய கூட்ட‌த்‌தி‌ல் பல‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர். கூ‌ட்ட‌ம் முடிவுற்றபோது அ‌ந்த இட‌த்‌தி‌ல் இரு‌ந்த தற்கொலை படையைச்சேர்ந்த ஒருவன் தா‌ன் வை‌த்‌திரு‌ந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளான். இதில் 30 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்' என்று தெரிவிக்கின்றனர்.