1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

சோனியா மிகச் சிறந்தவர் :சர்தாரி புகழாரம்!

பாகிஸ்தான் ஆசிப் அலி சர்தாரி சோனியா பெனா‌சிர்
'ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி 'மிகச் சிறந்தவர்' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி துணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி புகழாரம் சூடியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 'சோனியாவை போலவே நானும் இருக்க விரும்புகிறேன்' என்றார்.

"அரசாங்கத்திற்கு மேல் இருக்க நான் விரும்பவில்லை. அரசாங்கத்துடன் இருக்கவும், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தருபவராக இருக்கவும் விரும்புகிறேன்" என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை‌த் தலைவ‌ரு‌ம் முன்னாள் ‌பிரதம‌ர் பெனா‌சிர் புட்டோவின் கணவருமான ஜர்தாரி கூறினார்.

இதுபோதாது என்று, 'சோனியாவை போன்றே செயல்படக் கூடியவர் சர்தாரி' என்று அவரது கட்சி தொண்டர்களும் கூறிவருகின்றனர்.