1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ஹ‌ிலா‌ரி‌ ‌கி‌ளி‌ண்டனு‌க்கு ‌மீ‌ண்டு‌ம் தோ‌ல்‌வி!

ஹ‌ிலா‌ரி‌ ‌கி‌ளி‌ண்டனு‌க்கு ‌மீ‌ண்டு‌ம் தோ‌ல்‌வி!
அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் தே‌ர்த‌லி‌ல் ஜனநாயக‌க் க‌ட்‌சி‌யி‌ன் சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யிடு‌ம் வே‌ட்பாளரை‌த் தே‌ர்வு செ‌ய்வத‌ற்காக ‌வி‌ஸ்கா‌ன்‌சி‌ன் மாகாண‌த்‌‌தி‌ல் நட‌ந்த தே‌ர்த‌லி‌ல் ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்டனை ‌வீ‌ழ்‌த்‌தி பார‌க் ஒபாமா வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர்.

ஹ‌ிலா‌ரி‌க்கு எ‌திராக ஒபாமா பெ‌ற்று‌‌ள்ள 9 ஆவது வெ‌ற்‌றி இதுவாகு‌ம். இ‌ந்த வெ‌ற்‌றி‌யி‌ன் மூல‌ம் அ‌திப‌ர் தே‌ர்த‌லி‌ல் ஒபாமா போ‌ட்டி‌யிடுவத‌ற்கான வா‌ய்‌ப்புக‌ள் ‌‌பிரகாசமா‌கி உ‌ள்ளன. அவரு‌க்கு பெ‌ண்க‌ளி‌ன் ம‌த்‌தி‌யி‌ல் அ‌திக ஆதரவு இரு‌‌க்‌கிற ‌விடயமு‌ம் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

இதேபோல, குடியரசு கட்சியில் ஜான் மெக்கைன் விஸ்கான்சின் மாகாணத்திலும் வெற்றிபெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் அதிப‌ர் தே‌ர்த‌லி‌ல் மெக்கைன் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமாவை கடுமையாக தாக்கியுள்ள மெக்கைன், தொடர்ந்து அவரை எதிர்த்து கடுமையாக போராட போவதாக கூறியுள்ளார்.