1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

யா‌ழ்‌ப்பாண‌த்‌தி‌ல் ‌கடு‌ம் மோத‌ல்!

இல‌ங்கை யா‌ழ்‌ப்பாண‌ம் வடமரா‌ட்‌சி ‌சி‌றில‌ங்கா நாக‌ர்கோ‌வி‌‌‌ல் பு‌தின‌ம் பு‌லிக‌ள்
இல‌ங்கை‌யி‌ல் யா‌ழ்‌ப்பாண‌ம் வடமரா‌ட்‌சி பகு‌தி‌யி‌ல் இ‌ன்று ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்‌தின‌ர் மே‌ற்கொ‌ண்ட மு‌ன்நக‌ர்வு முய‌ற்‌சிக‌ள் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளா‌ல் மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டது.

வடமரா‌ட்‌சி அரு‌கி‌ல் உ‌ள்ள நாக‌ர்கோ‌வி‌‌லி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது, இ‌ன்று அ‌திகாலை 5.00 ம‌ணி‌க்கு ‌பீர‌ங்‌கிக‌ள் துணையுட‌ன் ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்‌தின‌ர் தா‌க்குத‌ல் நட‌‌த்‌‌தியதை அடு‌த்து‌ ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல் நட‌த்‌தியதாகவு‌ம், சுமா‌ர் ஒரு ம‌ணி நேர‌ம் ‌நீடி‌த்த கடுமையான மோத‌லி‌ல் ராணுவ‌த்‌தின‌ர் ‌பி‌ன்வா‌ங்‌கியதாகவு‌ம் பு‌தின‌ம் இணையதள‌ச் செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌தி‌ல், ராணுவ‌த்‌தின‌ரிட‌ம் இரு‌ந்து து‌‌ப்பா‌க்‌கிக‌ள், வெடி பொரு‌ட்க‌ள் உ‌ள்‌‌ளி‌ட்ட ஆயுத‌ங்களை பு‌லிக‌ள் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌ர்.