1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

டிச‌‌ம்ப‌ரி‌ல் ம‌ட்டு‌ம் 68 படை‌யின‌ர் ப‌லி: ‌சி‌றில‌ங்க ‌பிரதம‌‌ர் தகவ‌ல்!

விடுதலை‌ப் பு‌லி ர‌ட்ண‌சி‌றி ‌வி‌க்‌கிரமநாயக டிச‌ம்ப‌ர்
த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு எ‌திரான போ‌ரி‌ல் கட‌‌ந்த டிச‌ம்ப‌ர் மாத‌ம் ம‌ட்டு‌ம் 68 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளதாகவு‌‌ம், 468 பே‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளதாகவு‌ம் ‌சி‌றில‌ங்க ‌பிரதம‌ர் ர‌ட்ண‌சி‌றி ‌வி‌க்‌கிரமநாயக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இகு கு‌றி‌‌த்த ‌‌சி‌றில‌ங்க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் நே‌ற்று (புத‌ன்‌கிழமை) அவ‌ர் கூறுகை‌யி‌ல், சிறிலங்காப் படையினரில் சிலரும், சிங்கள மக்களில் சிலரும் புலிகளுக்கு ஆதரவாகச் செய‌ல்படுகின்றனர் எ‌ன்றா‌ர்.

"புலிகளுக்கு துணை போகிறவர்கள் குறித்து ‌விசா‌ரி‌த்து வரு‌கிறோ‌ம். பின்வாங்கு‌ம் புலிகளுக்கு மரு‌த்துவ உத‌விகளை வழ‌ங்கு‌ம் நடவடிக்கையிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

புலிகளின் பகுதிகளுக்கு சத்துணவுகளைக் கொண்டுசெல்ல அவர்கள் முற்படுகின்றனர். அத்தகைய சிலரை அடையாளம் கண்டிருக்கிறோம்" என்றார் ‌வி‌க்‌கிரமநாயக.