1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பு‌லிக‌‌ள் தா‌க்குத‌லி‌ல் 5 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

இல‌ங்கை ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ‌சி‌றில‌ங்கா ‌விமான‌ப் படை 5 பே‌ர் வவுனியா அ‌திரடி‌த் தா‌க்குத‌ல்
இல‌ங்கை‌யி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இ‌ன்று நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் ‌சி‌றில‌ங்கா ‌விமான‌ப் படையை‌ச் சே‌ர்‌ந்த 5 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

வவுனியா‌வி‌ல் த‌மிழ‌ர்க‌ள் பார‌ம்ப‌ரியமாக வ‌சி‌த்துவ‌ந்த ‌வீரபுர‌ம் பகு‌தி‌யி‌ல் ‌சி‌ங்கள‌ குடி‌யிரு‌ப்புகளை அரசு அமை‌த்து‌ள்ளது. இ‌க்குடி‌யிரு‌ப்புகளு‌க்கு ‌விமான‌ப் படை‌யின‌ர் இரவு பகலாக‌ப் பாதுகா‌ப்பு அ‌ளி‌த்து வ‌ந்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இ‌ன்று அ‌திகாலை 6.30 ம‌ணி‌க்கு ‌அ‌ங்‌கிரு‌ந்த சி‌றில‌ங்கா ‌விமான‌ப் படை‌யின‌ர் ‌மீது ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அ‌திரடி‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தின‌ர். இதில் ‌விமான‌ப் படையைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர் எ‌ன்று பு‌லிக‌ள் தர‌ப்‌பி‌ல் கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத்தாக்குதலில் வெடிபொருட்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களு‌ம் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டன எ‌ன்று புலிகள் கூ‌றியு‌ள்ளன‌ர்.