1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

மேலு‌ம் 5 இ‌ந்‌திய‌ர்க‌ள் ‌‌மீது கொலை முய‌ற்‌சி வழ‌க்கு!

மலே‌சியா இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர் கொலை வழ‌க்கு இங்கிலாந்து
மலே‌சியா‌‌வி‌ல், சமஉ‌ரிமை கே‌ட்டு நட‌த்த‌ப்ப‌ட்ட பேர‌ணி‌யி‌ல் அ‌ந்நா‌ட்டு காவ‌ல்துறை அ‌திகா‌ரி ஒருவ‌ரி‌ன் தலை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட காய‌த்து‌க்கு காரண‌ம் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌‌‌ப்ப‌ட்டு மேலு‌ம் 5 இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர் ‌மீது கொலை முய‌ற்‌சி வழ‌க்கு ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதனா‌ல், வழ‌க்கு ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு கைதா‌கியு‌ள்ள இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 31 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது. இவ‌ர்க‌ள் அனைவரு‌ம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை அந்நாட்டு வழக்கறிஞர்கள் பலரும் வ‌ன்மையாக‌க் கண்டித்துள்ளனர்.

மலேசியாவில் சம உரிமை கோரி அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவ‌‌ழியினர் கடந்த மாதம் 25-ஆம் தேதி கோலாலம்பூரில் பேரணி நடத்தி, இங்கிலாந்து தூதரகத்திடம் மனு கொடுக்க முற்பட்டனர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.