1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் 44 தமிழர்கள் கைது!

‌சி‌றில‌ங்கா தமிழர்கள் கைது
‌சி‌றில‌ங்கா‌வி‌ல் இரு பெண்கள் உள்ளிட்ட 44 தமிழர்களை ராணுவத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் இருந்து புத்தளம் கற்பிட்டி நோக்கி லா‌ரி ஒன்றில் சென்று கொண்டிருந்த த‌மிழ‌ர்களை அதிகாலை 5:30 மணியளவில் புத்தளம் பகு‌தி‌யில் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது த‌மிழ‌ர்க‌ள் தங்க‌ளி‌ன் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறியதா‌ல் அனைவரையு‌ம் கைது செய்ததாக சிறிலங்கா ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டியில் மீன்பிடி‌ப்பதற்காக‌ச் செல்வதாக‌த் த‌மிழ‌ர்க‌ள் கூறியதை ராணுவத்தினர் ஏற்க மறுத்து‌வி‌ட்டன‌ர். மேலு‌ம், கைது செய்யப்பட்டவர்கள் த‌ங்க‌ளி‌ன் அடையாளத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே அவர்களை விடுவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.