1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

பா‌கி‌ஸ்தா‌ன் மோத‌ல் : ப‌லி 175 ஆக உய‌‌ர்வு!

பா‌கி‌ஸ்தா‌ன் வசிரிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள்
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் தாலிபா‌ன் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம், ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் நடைபெ‌ற்று வரு‌ம் மோத‌லி‌ல் ராணுவ ‌வீர‌ர்க‌ள் 45 பேரு‌ம், ‌தீ‌விரவா‌திக‌ள் 130 பேரு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் எ‌ல்லை‌யி‌ல் தாலிபான் தீவிரவாதிகளுடன் ராணுவம் கடுமையான மோத‌லி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த 2 நா‌ட்களாக நடைபெ‌ற்றுவரு‌ம் இ‌ந்த மோத‌லி‌ல் ராணுவ வீரர்கள் 45 பேரும், தாலிபான் தீவிரவாதிகள் 130 பேரும் கொல்லப்பட்டனர் எ‌ன்று பாகிஸ்தான் ராணுவ செ‌ய்‌தி‌த் தொட‌‌ர்பாள‌ர் வாஹித் அர்ஷாத் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

முத‌லி‌ல் வடக்கு வசிரிஸ்தானில் உள்ள மிராலி எனும் நகரின் தென் பகுதிக்குள் நுழைந்த ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் கடுமையான தா‌க்குதலை நட‌த்‌தின‌ர். ‌பி‌ன்ன‌ர் ராணுவ‌த்‌தின‌ர் ‌விமான‌ங்க‌ள் மூலமாகவு‌ம், தரைவ‌ழியாகவு‌ம் ‌தீ‌விரவா‌திக‌ளை‌த் தா‌க்‌கின‌ர்.

மேலு‌ம் இ‌ந்த மோத‌லி‌ல் 3 பெ‌ண்க‌ள், 1குழ‌ந்தை உ‌ட்பட 8 பொதும‌‌க்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக‌த் தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ராணுவ‌த்‌தின‌ர் மலை‌ப்பகு‌திக‌ளி‌ல் ஹெ‌லிகா‌ப்ட‌ர், ‌விமான‌ங்க‌ள் மூல‌ம் கு‌ண்டுகளை ‌வீசு‌‌கி‌ன்றன‌ர். இ‌தி‌ல் ‌சி‌க்‌கி ஏராளமான பொதும‌‌‌க்க‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். பல‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர் எ‌ன்று பழ‌ங்குடி‌யின‌த் தலைவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

‌மிரா‌லி நகரை‌ச் சு‌ற்‌றிலு‌ம் மோத‌ல் நட‌க்கும் இட‌ங்க‌ளி‌ல் ஊரட‌ங்கு உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. கடைகளு‌ம் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.