1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ஹைதராபாத் குண்டு வெடிப்பு : பாக். கண்டனம்

ஹைதராபாத் குண்டு வெடிப்பு : பாக். கண்டனம்
ஹைதராபாத்தில் 40க்கும் அதிகமானோர் உயிரிழக்கக் காரணமான குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் ஒரு பயங்கரவாதமாகும். இதற்கு பின்னணியில் இருந்து ஒத்துழைப்பு தருபவர்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்று பாகிஸ்தானின் அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் தஸ்னிம் அஸ்லாம் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிக்க இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான கூட்டத்தில் பேசிய அஸ்லாம் கூறினார்.
சியாச்சின் பிரச்சினையில் கூடிய விரைவில் தீர்வு காணவே பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.