1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

மியான்மரில் மித நிலநடுக்கம்

மியான்மரில் மித நிலநடுக்கம்
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மியான்மரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை 6.26 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளிகளாக பதிவானது.

பூமத்திய ரேகையில் இருந்து வடக்கே 22.9 டிகிரி அட்ச ரேகையும், தீர்க்க ரேகை 94.3 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது.

(வார்த்தா)
About Writer
Webdunia