மூன்று மாதங்களுக்கு முன்னர் வரலாறு காணாத அளவிற்கு பீப்பாய் ஒன்றிற்கு 146 டாலர்களை எட்டிய கச்சா எண்ணெயின் விலை, தொடர்ந்து குறைந்துவந்து தற்பொழுது 100 டாலர்களுக்கு சரிந்துள்ளது. அமெரிக்காவின் நைமக்ஸ் சந்தையில் ஒயிட் குரூட் என்றழைக்கப்படும் கச்சா எண்ணெயின் விலை செப்டம்பர் 11ஆம் தேதி நிலவரப்படி 100.10 டாலர்களாகக் குறைந்துள்ளது. லண்டன் பிரெண்ட் குரூட் விலை பீப்பாய்க்கு 96.99 டாலராகக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40 விழுக்காடு அளவிற்கு...