இந்தக் கேள்விக்கு அமெரிக்க அரசிடம் பதில் கேட்டால், முழுமையான வெற்றி கிட்டவில்லை, அந்தப் போர் இன்னமும் முடிந்துவிடவில்லை. ஆனால், பயங்கரவாதம் பெருமளவிற்கு ஒடுக்கப்பட்டுவிட்டது என்றுதான் கூறும்.இதே கேள்வியை அமெரிக்க மக்களிடம் கேட்டால், தோல்விதான் என்று கூறி, ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் இழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை நினைத்து வருத்தத்துடன் பெரு மூச்சு விடுவார்கள். 7 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்களின் மீது...