1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

டாலர் மதிப்பு 21 பைசா சரிவு!

டாலர் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தை
இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 21 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.42.57/42.58 ஆக இருந்தது.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.42.78/42.79.

மத்திய அரசு உள்நாட்டு நிறுவனங்கள் அந்நிய நாடுகளில் வாங்கும் கடன் உச்சவரம்பை அதிகரித்துள்ளது. இத்துடன் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் செய்யும் முதலீட்டு அளவை உயர்த்தியுள்ளதால், டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.