1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. வணிகம்

டாலர் மதிப்பு அதிக மாற்றமில்லை!

வங்கி அந்நியச் செலாவணி சந்தை இந்திய ரூபாய்
இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் அதிக மாற்றமில்லை.

இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.42.71/42.74 ஆக இருந்தது.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.42.73/42.74.

பிறகு வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் ரூ.42.74/42.75 என்ற அளவில் இருந்தது. அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் இருந்து டாலரின் மதிப்பு அதிக மாற்றம் இல்லாமல் உள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்கள் டாலரை விற்பனை செய்தன. பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தன. ஆனால் அதிக அளவு டாலரின் மதிப்பில் மாற்றம் இல்லாம‌ல் இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
About Writer
Webdunia