Daily Horoscope
✕

வராக் கடன்கள் 24 விழுக்காடு உயர்வு: அசோசம்!

Written By Webdunia
Updated: வெள்ளி, 7 நவம்பர் 2008 (17:08 IST)
மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளின் வராக் கடன்கள் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 24.36 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகளில் உள்ள நமது மக்களின் வைப்பு நிதிகள் பாதுகாப்பாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்திருந்தாலும், வங்கிகளின் நிதி நிலை பலவீனப்பட்டுள்ளது என்றும் அசோசம் அறிக்கை கூறியுள்ளது.

பொதுத் துறை வங்கிகள் அளித்த காலாண்டு அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ள அசோசம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.15,463 கோடியாக இருந்த வராக் கடன்கள், இந்த ஆண்டின் காலாண்டில் ரூ.17,523 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.

இதேபோல பொதுத் துறை வங்கிகளின் முதலீடு வர்த்தக விகிதாச்சாரம் ( Capital Adequacy Ratio - CAR) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 13.41 விழுக்காடாக இருந்தது, இந்த ஆண்டின் காலாண்டில் 12.68 விழுக்காடாக குறைந்துள்ளது என்றும் அசோசம் அறிக்கை கூறியுள்ளது.

எல்லாம் காட்டு

2027 ஜனவரி 1ஆம் தேதி உங்களுக்கு 18 வயதா? இன்றே வாக்காளர் பட்டியலில் சேரலாம்.. சிறப்பு முகாம்..

புதிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவது எப்போது? புதிய தகவல்...

அதிகரிக்கும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்.. கூகுள் பிளே ஸ்டோரின் புதிய விதிகள்..

சவுதி அரேபியாவின் 80 மாடிகள் கட்டிடத்தில் ஏவுகணை தாக்குதல்.. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டகாசம்..

இனி Flying Squad பிடிச்சா பயமே இல்லை.. தொழில் முனைவோர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் உத்தரவு..

Show comments