Daily Horoscope
✕

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Written By Webdunia
Published: வெள்ளி, 9 மே 2008 (11:29 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, குறியீட்டு எண்கள் சரிந்தன. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 17 ஆயிரத்திற்கும் குறைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய போது ( 10.05 மணி நிலவரப்பட ி) மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,011.01 ஆக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 15 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 5,066.60 ஆக குறைந்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தது.

மும்பை சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது தகவல் தொழில் நுட்பம், வங்கி பிரிவு குறியீட்டு எண்கள் அதிக அளவு குறைந்தன.

காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 8.48 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 17,089.13 ஆக இருந்தது.

ஆனால் தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்டி 7.85 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 5,073.85 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 9.17, சுமால் கேப் 46.74, ப ி. எஸ ்.இ. 500- 1.22 புள்ளி அதிகரித்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 1172 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,030 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 67 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,529.43 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,253.92 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.724.49 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,344.41 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.734.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.609.51 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இன்று வாரத்தின் இறுதி நாள் ஆகையால், முதலீட்டு நிறுவனங்கள் இலாப கணக்கு பார்ப்பது தொடரும். எனவே இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஐரோப்பிய பங்குச் சந்தையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து, இந்திய பங்குச் சந்தையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 52.438, எஸ் அண்ட் பி 500 5.11, நாஸ்டாக் 12.75 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று காலை ஆசிய நாட்ட ு பங்குச ் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தது.

தென ் கொரியாவின ் சியோல ் காம்போசிட ் 26.12, ஹாங்காங்கின ் ஹாங்செங ் 411.73, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 9.81 ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 249.30, சீனாவின் சாங்காய் காம்போசிட் 195.87 புள்ளி குறைந்தது.

எல்லாம் காட்டு

தீபம் ஏத்தல!.. இந்து தமிழ்நாட்டில் நான் அடிமை!.. மோகன் ஜி காட்டம்....

மீண்டும் மீண்டுமா!.. இந்தியா, சீனா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டம்...

26 வருடங்களுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வரும் Gold Spot குளிர்பானம்...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உதயநிதி பேசிய வீடியோவை டெலிட் பண்ணுங்க.. ஆக்சன் எடுங்க.. நீதிமன்றம் காட்டம்....

Show comments