Daily Horoscope
✕

நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்-கார்வேந்தன் தகவல்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Written By Webdunia
Updated: செவ்வாய், 25 டிசம்பர் 2007 (11:06 IST)
இந்தியா நெல் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது என அரிசி ஆலை எந்திரக் கண்காட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் தெரிவித்தார்.

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள மகாராஜா கலையரங்கில் அரிசி ஆலை எந்திரக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. கண்காட்சியை கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா துவக்கி வைத்து பேசினார். பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் பேசியதாவத ு, இந்தியாவில் 73 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதைத் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர்.

இதில் 70 சதவீதம் பேர் கோதுமை, நெல் பயிரிடுகின்றனர். 1960ம் ஆண்டில் உலக நெல் உற்பத்தி 200 மில்லியன் மெட்ரிக் டன், 2004ம் ஆண்டு 600 மில்லியன் மெட்ரிக் டன், 2005ல் 700 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது.

உலகத்திலேயே சீனாவில் 182 மில்லியம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தியாகிறது. 137 மில்லியன் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யும் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அரிசி ஆலை நிர்வாகிகளுக்கு ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்க கருத்தரங்கில் வைக்கப்பட்ட கோரிக்கை பரிந்துரை செய்யப்படும் எ‌ன்று அவர் பேசினார்.

எல்லாம் காட்டு

ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டை ரத்து பண்ணனும்!.. சந்திரபாபு நாயுடு அட்வைஸ்....

பட்டாசு சத்தத்தை விட பட்டாக்கத்தி சத்தம்தான் அதிகமா இருக்கு!.. உதயநிதி கோபம்..

ஈரானுடன் வேலை போர் முடியவிலை': புதிய தாக்குதல் குறித்து மறைமுக எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்..

இந்தியாவில் 5-டோர் பிரிட்ஜ் அறிமுகம்: விலை ரூ.2.60 லட்சம்...

சென்னைக்கு செல்ல விமான கட்டணம் அதிரடி உயர்வு!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

Show comments