புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சமூக அவல‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2017 (19:17 IST)

திருக்குறளை எளிமையாய் எடுத்துரைக்க; Kural Bot பேஸ்புக் பக்கம்!!

சமூக வலைதளமான பேஸ்புக்கில் சிவசுப்பிரமணியம் என்பவர் Kural Bot என்னும் பக்கத்தை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் திருக்குறள் எளிமையாக சென்றடை ஒரு புது முற்சியை எடுத்துள்ளார்.


 
 
திருநெல்வேலியை சேர்ந்த இவர், தமிழ் மீது பற்று கொண்டவர். தற்போது லண்டனில் ஒரு நிறுவனத்துல வேலை பார்த்து வரும் இவர் எழுத்தாளர் வா.மணிகண்டன் அவர்களின் வலைப்பூவை (Blog) ஒரு ஆண்ட்ராய்ட் செயலியாக மாற்றி கொடுத்தவர்.
 
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மொழிகளும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக இந்த Kural Bot என்ற பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளார். 
 
இதை பற்றி சிவசுப்பிரமணியம் பேசியது, இந்த திட்டம் ஓப்பன் சோர்ஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. இதற்கு நேரம் மட்டும் தான் செலவானதே தவிர பணச் செலவு ஏதுமில்லை.
 
ஏற்கனவே காமத்துப்பால் என்னும் ஒரு பேஸ்புக் பேஜ் நடத்தி வருகிறேன். காமத்துப்பால் பிரிவில் உள்ள குறள்களை கொஞ்சம் கமர்ஷியலா மீம் மூலமாக விளக்கி கூறுகிறேன். 
 
இந்த Kural Bot என்னும் பக்கம் அனைத்து குறள்களையும் விளக்கத்துடன் தெளிவுபடுத்தும். பயனர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் குறள்களின் எண்ணை பதிவு செய்தால் அந்த எண்ணிற்குறிய குறளும் விளக்கமும் உங்களை வந்தடையும் என தெரிவித்துள்ளார்.