1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான பூஜை

நவராத்திரி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாள் நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மேலும், நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து  வழிபடுவது நமது மரபாக இருக்கிறது.

 
அனைத்து நவராத்திரி விழாக்களும் இரவு நேரங்களில் மட்டுமே பூஜை செய்யப்படும். இந்த பூஜைகள், தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு, இரவில் நாவராத்திரியை வழிபடுகிறார்கள். மறுநாள் விஐயதசமி அன்றுதான், பெரும்பாலனவர்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய கல்வி கற்பிப்பதைத் முறையாக தொடங்குவார்கள். 
 
ஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானிங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது விதமான அலங்காரங்கள், என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியரையும் பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும். இவற்றுடன்,  கோலங்கள், பொட்டுக்கள்,  திரவியங்கள், தானங்கள், மந்திரங்கள், வாத்தியங்கள், பெயர்கள் என ஒவ்வொன்றும் ஒன்பது  விதமாக அலங்கரிக்கப்படுகிறது.
 
நவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது விதமாக அம்பிகையை பூஜித்து வழிபட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் தாத்பரியம்.