1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

திருநீற்றுப்பச்சிலையில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள் என்ன?

திருநீற்றுப் பச்சிலை இலையைக் கசக்கி முகர்ந்து பார்த்தால், தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகிவிடும். திருநீற்றுப் பச்சிலை வாந்தியை நிறுத்துவதில் இது மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

திருநீற்றுப் பச்சிலை பூக்கள் வெள்ளை கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். திருநீற்றுப் பச்சிலை இலைகள் கொசு விரட்டியாகவும் பயன்படுகிறன.
 
திருநீற்றுப் பச்சிலை வளராத செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. திருநீற்றுப் பச்சிலையில் மிக அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது.
 
திருநீற்றுப் பச்சிலை மிகக்குறைந்த கலோரிகளைக் கொண்டது. பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாது, சிட்ரால், சிட்ரோனெலால், ஜெரானியால், மெத்தில் என ஏராளமான மூலப்பொருள்கள் இதற்குள் இருக்கின்றன.
 
தலையில் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை உள்ளவர்களுக்கு இதன் இலை சிறந்த தீர்வாக இருக்கும். திருநீற்றுப் பச்சிலை பருக்களை குணப்படுத்தும். திருநீற்றுப்  பச்சிலையின் விதைகள் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது. விதைகள் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையது.
 
திருநீற்றுப் பச்சிலை கண்கட்டி போன்ற வெயில் கொப்புளங்களுக்கும் இதனுடைய சாறு மிகச்சிறந்த தீர்வைத் தரும். திருநீற்றுப் பச்சிலையின் விதைகளைத் தான்  சியா விதைகள் என்ற பெயரில் விற்கப்படுகின்றன. இதைத் தான் ஜிகர்தண்டா போன்ற குளிர் பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.