ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத பொருட்கள் என்ன...?

தயிரை எப்போது சாப்பிட வேண்டும், எந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது, எதோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

நாம் சில உணவுப் பொருட்களுடன் சில உணவுப் பொருட்களை வைத்து சாப்பிட்டால் விஷ உணவு என்னும் ஃபுட் பாய்சன் ஆகிடும். நம் வீட்டில் உள்ள பெரியோரும் இதை சொல்வதுண்டு.
 
அதாவது தயிரில் உள்ள அதிக அளவு புரதமானது, பழங்கள் சாப்பிட்ட பின்னர் இது செரிமானத்தினை குறைக்கிறது. மேலும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும். அதற்குக் காரணம் பழங்களில் உள்ள அமிலத் தன்மையாகும்.
 
தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும். 
 
பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் இவற்றுடன் வாழைப்பழம் , கீரை போன்றவைகளை எடுத்துக் கொள்ளுதலைக் குறைத்த்ல் வேண்டும், ஏனெனில் இது செரிமானமாக அதிக நேரம் பிடிக்கும். அதிலும் இரவு நேரங்களில் கூடவே கூடாது என்னும் அளவு தடா போட்டு விடவேண்டும்.
 
முக்கியமாக தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது. அதேப் போல் தயிருடன் சீஸ் சேர்த்தும் சாப்பிடக்கூடாது.
 
தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.
 
அதே சமயத்தில் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன், காடை, கவுதாரி என எந்தவொரு அசைவ உணவுடனும் தயிரை சாப்பிடகூடாது. அதிலும் மிக முக்கியமாக மீனையும் தயிரையும் ஒன்றாக சாப்பிட்டால் தோல் வியாதிகளான வெண் குஷ்டம் போன்றவை ஏற்படும்.