புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நீரிழிவுநோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய உணவு வகைகள் என்ன...?

கொய்யா, ஆப்பிள், பப்பாளி, நெல்லி, ஆரஞ்சு, அத்தி போன்றவற்றை அளவோடு சாப்பிடலாம். மா, பலா, வாழையை சிறிதளவு சுவைக்கலாம். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க சிறுதானியங்கள் சிறப்பானவை.

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறை பற்றி நிறைய கேள்விபட்டிருப்போம். அரிசியே வேண்டாம் என எந்த மருத்துவ முறையும் சொல்லவில்லை. அரிசி அளவை குறைக்க சொல்கிறது. அதனுடன் காய்கறி அளவை அதிகரிக்க அறிவுறுத்துகிறது.
 
கிழங்கு வகைகளைத் தவிர்க்க சொல்கிறது. காரணம், குளுக்கோஸின் அளவை விரைவாக அதிகரிக்க செய்வதால் தான், புரத சத்துகள் நிறைந்த முளைகட்டிய  தானிய வகைகளை சாப்பிட்டு வர பயன் தரும்.
 
தினமும் ஒரு கப் சாப்பிட்டு வர சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியம் மேம்படும். டீ, காபியில் வெள்ளை சர்க்கரை, தேன், வெல்லம் சேர்க்க கூடாது. சுகர் ஃப்ரீ என்று சொல்லப்படும் சர்க்கரையும் தவிர்க்க வேண்டும்.
 
உடலில் செல்லும் ரத்த ஓட்டத்தில் சர்க்கரை சத்தை மெதுவாக வெளியிடும் தன்மை இருப்பதால் தினமும் ஒரு சிறுதானிய வகையில் செய்த உணவை  சாப்பிடலாம்.
 
ஆவாரைக் குடிநீர் சூரணம், சீந்தில் சூரணம், திரிபலா சூரணம், சிறுகுறிஞ்சான் பொடி, நாவல் கொட்டை சூரணம், மதுமேக சூரணம் ஆகியவற்றை சித்த மருத்துவரின்  ஆலோசனையோடு எடுத்துக்கொள்ள சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். கூடுதலாக, தியானம், நடைபயிற்சி, யோகா செய்துவர சர்க்கரை நோயால் வரும் மற்ற  பாதிப்புகளும் தவிர்க்கப்படும்.