வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெள்ளறுகுவை எந்த வகையில் பயன்படுத்துவதால் நன்மைகள் கிடைக்கும்...?

வெள்ளறுகு சூரணத்தைப் பயன்படுத்துவதால் வாத நோய்கள் மூட்டு வலிகள், மலச்சிக்கல், சர்க்கரை நோய் ஆகியன குணமாகும் என்று பழமை வாய்ந்த சித்த மருத்துவ நூல்கள் தெரியப்படுத்துகின்றன.
வெள்ளறுகுவின் இலை, வேர் போன்றவற்றை நாட்டு மருத்துவர்கள் பயன்படுத்தி மலேரியா காய்ச்சல், சரும நோய்கள், தொழுநோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப்படுத்த வந்தனர்.
 
வெள்ளறுகு சமூலத்தை உலர்த்தி பாதுகாப்பாக வைத்திருக்க பல ஆண்டுகள் கூட கெடாமல் நின்று பயன்தரக்கூடியது. வெள்ளறுகில் இரும்பு சத்தும், பொட்டாசியம் சோடியம், கால்சியம், குளோரைட், சல்பேட், பாஸ்பேட் மற்றும் வைட்டமின் சி மற்றும் பி ஆகியன செறிந்துள்ளன.
 
வெள்ளறுகு சமூலம் (இலை, பூ, தண்டு, வேர் அனைத்தும்) கைப் பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் அளவாகச் சுருக்கி இனிப்பு சேர்த்து  உள்ளுக்குக் கொடுக்க கடுமையான வயிற்றுப் புண், வயிற்றுப் பொருமல், வாயு பிடிப்பு, நரம்புகளைப் பற்றிய வீக்கம், வலி, சொறி, சிரங்கு  ஆகியன குணமாகும்.
 
வெள்ளறுகு சமூலத்தை மைய அரைத்து விழுதாக்கி உடலில் காணும் நமைச்சல், அரிப்பு, சிரங்குகள் இவற்றின் மேல் பூசிவர சில  நாட்களிலேயே குணம் தரும்.
 
வெள்ளறுகு இலையை எடுத்து சுத்தகரித்து அரை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி அதனோடு சிறிது மிளகுத் தூளும் ஒரு திரி  பூண்டுப் பல்லும் சேர்த்து காலையில் பாலில் கலந்து கொடுத்து வருவதால் மேக நோய் குணமாகும்.
 
வெள்ளறுகு சமூலத்தை மைய அரைத்து வெண்மிளகு ½ தேக்கரண்டி அளவு சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி வடித்து அதனுடன் சிறிது பசுவின் வெண்ணெய் சேர்த்து உள்ளுக்குப் பருகுவதால் உடல் வெப்பம் தணியும். சிறுநீர்த்தாரை எரிச்சல், மூலச்சூடு, ஆசனவாய் எரிச்சல் ஆகியன  தணியும். சிறுநீரும் தாராளமாக வெளியேறும்.
 
மாதவிலக்கான முதல் மூன்று நாட்களுக்கு வெள்ளறுகு சமூலத்தை அரைத்து விழுதாக்கி எலுமிச்சம் கனி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்துவர பெண் மலட்டுக் காரணமான கருப்பைப் புழு வெளியேறுவதோடு மாதவிலக்குக் கோளாறுகள் பலவும் தீரும்.