வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2022 (12:40 IST)

ப்ராக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?

ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, அதில் பல நார்ச்சத்து நீரில் கரையகூடிய தன்மை கொண்டது. இந்த நார்ச்சத்து பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களை செரிமான உறுப்புகளில் படியச் செய்கிறது. மேலும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறச் செய்கிறது.


மலச்சிக்கல், செரிமான பிரச்சனை கொண்டவர்களுக்கு ப்ராக்கோலி சிறந்து மருந்தாக இருந்து வருகிறது. ப்ரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் செல்களை அதிகரிக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை ப்ராக்கோலியை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் நல்லது.

ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் தோல் சுருக்கம் ஏற்படாமல், தோல் ஈரப்பதத்துடன் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தொற்றத்தை உண்டாக்குகிறது.

ப்ராக்கோலியை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடலில் இருக்கும் செல்களால் ஏற்படும் புற்றுநோய் போன்றவை ஏற்படுவது குறைவு.

ப்ராக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்ததில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. இதயத்தில் ரத்த குழாய்கள் அடைக்காமல் பாதுகாக்கிறது.

ப்ராக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதில் உள்ள சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது,மேலும் கண் மங்குதல், கண் புரை போன்றவற்றை நீக்குகிறது.