பித்த வெடிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் !!
பாதங்கள் வெளியில் தெரிவதால், அதில் உள்ள ஈரப்பசை போய் வறட்சி ஏற்படுகிறது. வறட்சியால் குதிகால் பகுதியில் வெடிப்பு உண்டாகிறது. வறட்சியான சருமம் உள்ளவர்கள், அதிக தண்ணீர் குடிப்பதோடு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும்.
உடல் எடை அதிகமாக இருப்பதும் குதிகாலில் வெடிப்பை ஏற்படுத்தும். பாதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால், இப்பிரச்னை தொற்றிக்கொள்கிறது. உடல் எடையைக் குறைப்பதே இதற்குத் தீர்வாகும்.
பித்தவெடிப்புப் பிரச்னை ஏற்பட்டவுடன், அது மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்காக கால்களை அழுக்கிலும், ஈரத்திலும் இருந்து பாதுகாப்பதற்காக காலணி அணிய வேண்டும். இதன் மூலம் பாதவெடிப்பு பெரிதாகாமல் தடுக்கலாம்.
* பாதவெடிப்பில் உள்ள டெட் செல்கள் நீங்குவதற்கான கிரீம் பயன்படுத்தி, ஸ்கிராப் மூலம் தேய்த்து நீக்கலாம். டெட்செல்கள் நீங்கிய பின் பாதவெடிப்பு போவதற்கான மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்தலாம்.
* வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவலாம். படுக்கச் செல்லும் முன்பும் பாதங்களைச் சுத்தம்செய்து கிரீம் தடவிக்கொள்வது பாதத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவும்.
* பித்தவெடிப்பு உள்ளவர்கள், மிதவெப்பமான தண்ணீரில் கல்உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கால்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின் கால்களை ஸ்கிரப் கொண்டு தேய்த்து, டெட் செல்களை நீக்கலாம்.
* பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலைகளைத் தேய்த்துவிடலாம். பித்த வெடிப்பு அதிகரிக்காமல் தடுக்க, தரமான காலணிகளைத் தேர்வுசெய்து பயன்படுத்தலாம்.