திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எலுமிச்சையில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்துக்கள் !!

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைப் பல மடங்கு அதிகரிக்கிறது.


மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும்  கட்டுப்படுத்துகிறது.
 
நம் உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக்  குறைவைத் தகர்த்து விடுகிறது.
 
உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 
 
இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.
 
நம் உடலில் செரிமானம் மட்டும் ஒழுங்காக இல்லையென்றால், அது பலவிதமான உபாதைகளை ஏற்படுத்தும். எலுமிச்சை ஜூஸை குடிக்கும்போது, அது உடலில் உள்ள அனைத்து கசடுகளையும் அடித்து இழுத்து கொண்டு வருவதால், செரிமான பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.