Daily Horoscope
✕

மருத்துவகுணம் நிறைந்த கீழாநெல்லி இலையை பயன்படுத்தி நோய்களுக்கு தீர்வு...!!

Written By Sasikala
Updated: புதன், 3 ஜூன் 2020 (11:49 IST)

கீழாநெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து  ஒரு சொட்டிகை சீரகத்தூள், இனிப்புக்கு பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும். மோரை நீர்மோராக பெருக்கி அதில் விழுதை கலந்து குடித்தாலும் காமாலை குணமாகும்.
 
மாதம் ஒரு முறை வெறும் வயிற்றில் கீழாநெல்லி இலையை அரைத்து சாறாக்கி பெரியவர்கள் 30 மி.லி. அளவிலும், சிறுவர்கள் 15 மி.லி. அளவிலும் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.
 
கீழாநெல்லியை சுத்தம் செய்து அதில் மூன்று மடங்கு அளவு நீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். நீர் ஒரு பங்காக சுண்டியது அதை குடித்துவரவேண்டும். தினமும் ஒரு டம்ளர் அளவு இதை குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறும். நச்சுக்கள் நீங்கி சிறுநீரகம் சிறப்பாக இயங்கும்.
 
சர்க்கரை நோயால் அவதிப்படுவர்கள் தினமும் மூன்று வேளை உணவுக்கு முன்பு கீழாநெல்லி பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள்  வரும்.
 
கீழாநெல்லி இலையை அரைத்து விழுதாக்கி ஒரு டம்ளர் மோரில் அரை டீஸ்பூன் அளவு கலந்து லேசாக உப்பு சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிர்று கோளாறுகள் நீங்கும்.
 
உடலில் சரும வியாதிகள் இருப்பவர்கள் கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள்  ஓடிவிடும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments