1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நீரிழிவு நோயாளிகள் பின்பற்றவேண்டிய உணவு வகைகள் !!

நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். பின்வரும் உணவு வகைகள் நீரிழிவு  நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் உணவு வகைகள் ஆகும்.

சாலமோன், மத்தி, நெத்திலி வகை மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவுகள் ஆகும். மேற்கண்ட மீன் வகைகள் அனைத்தும் ஒமேகா கொழுப்பு  அமிலங்கள் நிறைந்த உணவுகள் ஆகும்.
 
பச்சை கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நல்லது மற்றும் அவை குறைந்த கலோரிகளை மட்டுமே அளிக்கக்கூடியது. அதிகப்படியான பச்சை கீரை  வகைகளை உண்பது கண்களுக்கு நல்லது மற்றும் சர்க்கரை நோயினால் வரும் கேட்டராக்ட் போன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.
 
தயிர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை  குறைக்கின்றது.
 
ஆப்பிள் சீடர் வினிகர் பல உடல் நலன்களை உள்ளடக்கியது. இது ஆப்பிளில் இருந்து செய்யப்படும்போது அதில் உள்ள சர்க்கரை அசிட்டிக் ஆசிட் ஆகா  மாற்றப்படுகிறது. இது குறைந்த ரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவுகிறது.
 
பூண்டு ஒரு சத்தான மூலிகை மற்றும் பல நல்ல பலன்களை உள்ளடக்கியது. இது ரத்த கொதிப்பை கட்டு படுத்த உதவுகிறது. பூண்டு ரசம் மற்றும் உணவு  வகைகளில் பூண்டினை அடிக்கடி சேர்த்து உண்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.